பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



550

திருக்குறள்

(ஆசாரியர் குந்தகுந்தர் தத்துவப்பரப்புமையம், குந்தகுந்த நகர் 604302 வெளியீடு ஆகம ஞானமலர் 1, சுவடி2, பாடம் 6 திரவியம் (பக்கம் 19-21) காண்க. திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும் என்றநூல் பக்கம் 25 காண்க. மேருமந்தரபுராணம் 69, 70, 71, 83, 88, 93 ஆம்செய்யுட்கள் சீவன்முதலிய ஆறு திரவியங்களைப்பற்றிக் கூறுவனவாம்

261. இக்குறளுரையில் “உற்றநோய்” என்பதற்கு உரையில்லை; “தம் உயிர்க்கு வரும் துன்பங்கள்” என்பது பொருள். தோன்றல் - பொறுத்துக்கொள்ளுதல்; குறைக்கிறது என்று உரையிலுள்ளது.

264. உத்தமகக்ஷமை முதலிய பத்துத்தருமங்கள். (பக்கம் 152- 153 தி.ஆ)

உத்தமக்ஷமை: தன்னை அறுத்தாலும் அறுப்பவனுக்கு நிழலைத் தருகின்ற மரம்போலத் துன்பங்களைச் செய்தவர்களுக்கும் நன்மையுண்டாகுமாறு தர்மோபதேசம் செய்தல்.

உத்தமமார்த்தவம்: வணக்கமுடையவராய் எல்லா உயிர்களிடத்தும் சமநோக்குடையராயிருத்தல்.

உத்தம ஆர்ஜவம்: உள்ளும் புறம்பும் இரத்தின தீபத்துக்குச் சமானமாகி மேலான குணமுடையவராயிருத்தல்.

உத்தம சத்யம்: உயிர்களுக்கு உறுதிபயப்பனவாகிய உண்மை மொழிகளையே கூறுவது.

உத்தமசவுசம் ஆகாதென்று நீக்கப்பட்ட வஸ்துக்களின் மேல் மனம் செல்லாத பரிசுத்த தருமகுணம்.

உத்தமஸம்யமம்: மெய் வாய்கண்மூக்குச்செவி மனம் என்னும் ஆறு விஷய வழிகளிற் செல்லாமல் தடுத்துச் சீவன்களை அருளுடன் உபசரித்தல்.