பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

553

(சுக்கிலதியானம் - பரிமேலழகருரை - 356 ஆம் குறள் உரை காண்க)

33 ஆம் அதிகாரம் கொல்லாமை

ஏழு விதவுயிர்கள்: நுண்ணிய ஒரறிவுயிர் : பருத்த ஒரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், மனதோடு கூடிய ஐயறி வுயிர், மனமில்லாத ஐயறிவுயிர் (அச்சு நூல் பக்கம் 125) குறள் 62க்குரிய உரை - குறிப்புரை காண்க)

322.

தான் சாப்பிடுகிறதையாகிலும் பசித்த பேருக்குப் பகுந்து கொடுத்து - என்றவிடத்து அச்சு நூலில், “தான் சம்பாதிக்கின்றதைச் சாஸ்திரத்தில் உபதேசித்த பேருக்குப் பகுந்து கொடுத்து” என்றுளது.

மேலும் சிறப்புரையில், “கொல்லாத படியாய்க் காத்தல்” என்றவிடத்து அச்சுநூலில், “கொலை வராமல் க்ஷாயிகம் காத்தல்” என்றுளது.

335.

புத்திர மித்திர களத்திராதிகளை - மக்கள், நண்பர்,மனைவி முதலானவர்களை நிச்சயம் - உறுதி.

345.

உடம்புகள் ஐந்துவகை : ஒளதாரிகம், வைக்ரீயிகம்,

ஆஹாரகம், தைஜஸம், கார்மணம் என.

ஒளதாரீகம்: இந்திரியங்களால் அறியக்கூடிய ஸ்தூலசரீரம்.

வைக்ரீயிகம்: சிறிதாயும் பெரிதாயும் லேசாயும் கனமாயும் அநேக பிரகாரங்களால் விகார மடையக்கூடிய சரீரம்.

ஆஹாரகம், சூக்கும பதார்த்தங்களை அறிதற்காக பிரமத்த குண ஸ்தானத்திலுள்ள மகாமுனிகளுடைய உடம்பினின்று புறப்படும் சரீரம்.

தைஜஸம், பிரகாசத்தையுடைய சரீரம்.

கார் மணம் ஞானாபரணீயம் முதலிய எட்டுக் கருமங்களின் சேர்க்கையால் உண்டாகிய சரீரம்.