பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



554

திருக்குறள்

இந்திரியங்கள் ஜந்து : மெய்வாய் கண் மூக்குச் செவி.

கரணம் மூன்று : மனம், வாக்கு, காயம் (இவை பலப் பிராணன்கள்).

உச்வாசம் - சுவாசம் விடுதல்.

நிச்வாசம் - சுவாசம் ஒடுங்குதல் (இழுத்தல்).

346.

குரு ஆகம தெய்வபக்தி - இறைவனும், நூலும், குருவும் வழிபாட்டுக்குரியவர். அருகன் அருளிய நூல்வழி ஆன்மசாதனை செய்து காட்டும் பற்றற்ற துறவியர்களே குரு எனப்படுவர். அறவழியில் செல்ல வழிகாட்டியாகவுள்ள அருகன் நூலும் அருகனைப் போல வழிபாட்டுக் குரியது. இந்நூல்கள் ஆகமம் அல்லது பரமாகமங்கள் எனப்படும். பரமாகமங்களை நான்கு வகைப்படுத்தி அவற்றை நான்கு அது யோகங்கள் என்பர். அவை 1. பிரதாது யோகம், 2. கரணாது யோகம். 3. சரணாது யோகம், 4. திரவியாது யோகம் என்பன (விரிவை ஆகம ஞானமலர், சுவடி 5, நான்கு அது யோகங்கள் பார்க்க)

352.

சங்கை (ஐயம்) முதலிய 25 குற்றங்கள் - குறள் 174க்குரிய குறிப்புரையில் காண்க.

நிச்சங்கை ஐயமின்மை முதலிய எட்டு:—

நிச்சங்கை (ஐயமின்மை) நீர்க்காம் ஷை (அவாவின்மை); நீர் விசிகித்ஸை (உவர்ப்பின்மை); அமூட த்ரஷ்டித்வம் (மயக்கமின்மை); உபகக்ஷஹனம் (செய்பழி நீக்கல்); ஸ்திதிகரணம் (திரிந்தாரை நிறுத்தல்): வாத்ஸல்யம் (அன்புடைமை) மார்க்க ப்ரபாவனை (அறவிளக்கம் செய்தல்)

க்ஷாயிக சம்யக் தரிசனம் :

நற்காட்சி, சம்யக்த்வம், சம்யக்தரிசனம் என வழங்கும் சம்யக்த்வம் மூன்று வகைப்படும்:

அவை உபமை சம்யக்த்வம், வேதக சம்யக்த்வம், க்ஷாயிக சம்யக்த்வம்