பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

555

உபமை சம்யக்த்வம் என்பது, ஐயமின்மை (நிச்சங்கை) முதலிய எண் வகைக் குணங்களை யுடையது, ஐயம் (சங்கை) முதலிய இருபத்தைந்து குற்றங்களின் நீங்கியது.

க்ஷாயிக சம்யக்த்வம் என்பது அறந்தானு பந்தி குரோதம், மானம் மாயம், லோபம், மித்யாத்வம், சம்யக் மித்தியாத்வம் சம்யக்த்வ ப்ரக்ருதி ஆகிய ஏழு சப்த பிரகிருதிகளை அறவே விடுவது.

சந்தேகம் விபரீதம் முதலிய குற்றங்களின்றி நூல்களை அறிவது ஸம்யக் ஞானம் (நல்லறிவு) ஆகும். அவற்றைச் சந்தேகமறத் தெளிதல் ஸம்யக் தரிசனம் ஆகும்.

நாலுகதிகள் : மனிதகதி, நரக கதி, விலங்கு கதி, தேவகதி என்பன.

354.

சக்தி பஞ்சேந்திரிய சீவன் : தசப்பிராணன்களுடன் சீவிப்பவனாகிய ஆன்மா (திருக்குறள் ஆராய்ச்சி ஜைந சமய சித்தாந்த விளக்கம் பக் 187, 188)

(மன வாக்குக் காயமாகிய பலப்ரானந் 3: இந்திரியப் பிராணன் 5; ஆயுஷ்ய பிராணன் 1; உச்வாச நிச்வாச 1. ஆக 10)

நற்காட்சி : உயிர் முதலான ஏழு தத்துவங்களில் அசையாத நம்பிக்கை யிருத்தல்

ஏழு தத்துவங்கள் : உயிர் (ஜீவன்); உயிரல்லது (அ ஜீவன்) ஊற்று (ஆஸ்ரவம்): கட்டு (பந்தம்): செறிப்பு (ஸம்வரை): உதிர்ப்பு (நிர்ஜரை); வீடு (மோட்சம்) (ஆகம ஞானமலர்,பாடம் 3).

355.

சீவாதி பொருள்கள் : உயிர், புற்கலம் தன்மம், அதன்மம், ஆகாயம் காலம் என இவை. (குறள் 249 க்குரிய குறிப்புரை காண்க).

சுத்தாத்மஸ்வரூபம் துாய ஆன்மாவின் உருவம்