பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

656

திருக்குறள்

கேவலக் ஞானம் : திரிகால வுணர்ச்சி (சீவகசிந்தாமணி செ. 30 60)

363.

‘துறவு என்பதற்கு அச்சுநூலில் துறக்கம் என்றுளது. துறக்கம் ஆவது சுவர்க்கம்: அளவிற்கு உட்பட்ட சுகத்தை யுடையது என்பர்’ (2 - 9 - 5 இன் ஈடு வியாக்கியாம்): தேவர் உலகு.
2. விரதம் என்பதற்கு அச்சு நூலில் வித்தம் என்றுளது. வித்தம் என்றால் செல்வம் என்று பொருள்.
3. ஆசையில்லாதவனே என்றவிடத்து அச்சு நூலில் ஆசை யில்லாத அருகனே என்றுள்ளது.

364. ஆசையில்லாமை ' மெய்ம்மையை’ என்ற இரு சொற்கள் இருக்க வேண்டிய இடத்தில், அச்சு நூலில் மோக்ஷம்' என்றுளது. இது பொருந்தாது. (அது - ஆசையில்லாமை; வாய்மை - மெய்ம்மையை என்று பதம் பிரித்து உரை காண்க)

374. அறிவு[1] என்ற மூன்றிடங்களிலும் காகிதச் சுவடியில் வெற்றி யென்றே யுள்ளது வெற்றி என்றதன் காரணம் ஆய்வுக்குரியது

381. துர்க்கம் - மலைமேல் கோட்டை : காடு

389. கீழ் + தங்கு (கீழ்த்தங்கு) . கீட்டங்கு: திகடசக்கர என்ற கந்த புராணத் தொடக்கம் காண்க.

426. கயப்பூ - முன் மலர்தலும் பின் குவிதலும் உடையன. கோட்டுப்பூ - முன்மலர்தலும் பின் குவிதலு மின்றி ஒரே நிலையில் இருப்பனவாம்.

517. மூன்று - வினை முதல் (இவன்); கருவி (இதனால்) வினை (இதனை) என்ற வற்றால் இக்குறளிற் குறிக்கப் பட்டன

  1. 1