பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



559

ஜைன உரை

வாராது என்பதாம்

66ஆம் அதிகாரம் வினைத்துாய்மை ;

என்பது, செய்யப்படும் காரியங்கள் பொருளேயன்றி அறமும் புகழும் கொடுத்து நல்ல ஆதல் - அச்சுநூல்

711.

செஞ்சொல் - வெளிப்படைச் சொல்; நிலம் நீர் என்றாற் போல்வன.
இலக்கணச்சொல் - ஆக்கச் சொல், உரிய பொருளை விட்டு அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளை யுணர்த்துவது. ஊர் அடங்கிற்று என்பதில் ஊர் என்பது, ஊராரை உணர்த்துதல் போல்வன.
குறிப்புச்சொல் - குறிப்பினால் பொருளுணர்த்துஞ்சொல்: “உவர்க் கடலன்ன செல்வர்” என்பது பிறர்க்குப் பயன்படாத செல்வமுடைய உலோபிகளைக் குறிக்கும். “அலங் குளைப்புரவி ஐவரொடு சினை இ” என்றதுள் ஐவர் என்னும் தொகைக்குறிப்புச் சொல் பாண்டவரை உணர்த்திற்று.

719.

இங்குக்கண்ட சிறப்புரைக்குப்பதிலாக அச்சு நூலிற் கண்டது:

கற்றவர் அறிவிலார் சபையில் பேசினால் அவரைச் சபையின் தன்மை அறிந்திலர் என்று நல்லோர் இகழ்வர்; அவர் சொல்லும் பொருள்களை அறிய மாட்டாமையால் புல்லோர் அலக்ஷ்யம் செய்வர்.

755.

அச்சுநூற் பொருள்: —

தாம் குடிகளிடத்திலே செய்யும் அருளோடும், அவர்தம்மிடத்திலே செய்யும் அன்போடும் கூடாத பொருளை அரசர் கைக்கொள்ளாமல் விட்டுவிட வேணும்.

762.

மூலப்படையே நல்ல தென்பது என்பதற்கு முன், அச்சு நூலில், ‘மூலப்படை கூலிப்படை. நாட்டுப்படை, காட்டுப்