பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560

திருக்குறள்

படை, துணைப்படை, பகைப்படை என்னும் அறுவகைப் படையுள் என்றுளது. (பரிமேலழகருரையும் காண்க.)

764.

இப்பாடல், புறப்பொருள் வெண்பா மாலை, வாகை படலம், 22ஆம் பாடல் ஆகும். இதன் பொருள்:—

எந்தை - என் தந்தை, கல் நின்றான் - கல்லிலே பொருந்தினான்; கணவன் - என் கணவன், களம்பட்டான் = போர்க்களத்திலே இறந்தான்; என் ஐயர் - என் தமையன்மார், முன் நின்று - பகைவரை எதிர்த்து நின்று, மொய் அவிந்தார் - இறந்தனர்; என்ஏறு -என் மகன். பின் நின்று – தன் சேனை அழிந்த பின்னரும் கலங்காது நின்று. கைபோய்க் கணை உதைப்ப - தன் கைகள் மட்டும் அம்புகளைச் செலுத்த: காவலன் மேல் ஓடி - பகையரசன் மேல் எதிர்த்துச் சென்று: எய் போல் கிடந்தான் - (பகைவர் எய்த அம்புகள் தன் உடல் முழுதும் தைக்க) முள்ளம் பன்றி போலக் கிடந்தான்.


போரில் பின்னிடாது பகைவனை யெதிர்த்து அவனால் விழுப்புண்பட்டுக் கிடக்கின்ற வீரனின் தாய் கூற்றாக அமைவது. இப்பாடல். இது வாகைத்திணையில் ஏறாண் முல்லை என்னும் துறை.
“மாறின்றி மறங்கனலும், ஏறாண்குடி யெடுத்துரைத் தன்று” என்பது கொளு.
எதிரில்லாமல் ஒழியும்படி சினம் மிகுகின்ற மேன் மேல் அதிகரிக்கின்ற ஆண்மைத் தன்மையை யுடைய குடியொழுக்கத்தை யுயர்த்துச் சொல்லியது - என்பது இக் கொளுவின் பொருள்.
குறிப்பு: கல் நின்றான் என்றது, போரில் இறந்து நடுகல்லிலே பெயரும் பீடும் பொறிக்கப்பட்டுச் சிறப்பெய்தினான் என்பதாம்.

771.

காகிதச் சுவடியில் முற்பகுதியில் ‘தெவ்விர்’ என்பதைத் ‘தெவ்வர்’ என்றும், ‘என்னை’ என்பதை ‘என்’ என்றும்