பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

561

கொண்டு பொருள் தரப்பட்டது. காலிங்கரும் ‘வறிதே என் முன் வந்து நில்லன் மின்... ...எனது முன்னே வந்து நின்று ...’ என்றார். என்னை என்ற ஈரிடத்திலும் காலிங்கர் ‘என்’ என்றே கொண்டார். பரிதியாரும் அங்ஙனமே. இச்சுவடியில் முதல் ‘என்னை’ என்பதற்கு ‘என்னுடைய ராசா’ என்றும், அடுத்த ‘என்னை’ என்பதற்கு ‘என்னுடைய வேல்’ என்றும் பொருள் தரப்பட்டது.


சிறப்புரை காகிதச் சுவடியில் பின்வருவது;—
‘கல்லின்கண் நின்ற - பெயர் பொறிக்கப்பட்டுநின்ற; கல்லில் தெய்வ வடிவாய் ஆவேசித்து நின்ற’

899.

மகாவிரத முடையவர்கள் - துறவிகள், மகாவிரதங்கள் நூற்றுக் கோடி (சீவக சிந்தாமணி செ. 2818) (தி.ஆ பக். 142) முனிவர்க்குக் கேவல ஞானம் உண்டான அளவில் இந்திரன் அவதி ஞானத்தால் அறிவன்: அறிந்து கேவல பூஜை செய்வன் (தி. ஆ.பக்கம் 194-195 பார்க்க) எனவே இந்திராதி தேவர்கள் பூசிக்கும் பெருமை வாய்ந்தவர்கள் ஆதலின் பெரிய விரதங்களையுடைய துறவிகள் தேவர்களினும் சிறந்தவராதல் துணிபு.

985.

  • முதல் * வரை இது கருத்துரையாகும். இது அச்சு நூலில் இல்லை. இந்த இடத்தில் அச்சு நூலில், “சான்றோர் தம் பகைவரைப் பகையை யொழிக்கும் கருவியும் அதுவே” என்றுள்ளது. இது குறளிற் கண்ட “சான்றோர் மாற்றாரை மாற்றும் படை” என்பதன் உரையாகும்.

986.

இவ்வுரையிலும் பிற் பகுதி கருத்துரையாதல் கூடும். அச்சுநூல் உரை பின்வருமாறு:—

சால்பு என்னப்பட்ட பொன்னின் அளவு அறிகிறதற்கு உரை கல்லாகிய செயல் ஏதென்றால், தன்னிலும் பெரியோர்களிடம் கொள்ளும் தோல்வியைத் தன்னிலும் தாழ்ந்தவரிடமும் கொள்ளல் என்றவாறு.