பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



562

திருக்குறள்

1069.

‘இரப்பை நினைத்தால் நம் உள்ளம் உருகுகின்றதே இரந்து பெறும் யாசகர் மனம் எவ்வாறு இருக்குமோ’ என்றார் பிறரும் - இங்ஙனம் அச்சு நூலில் உள்ளது. இது பின் வரும் நாலடியார் (305) பாடலின் பொழிப்பாகும்:

“இரவினை, உள்ளுங்கால் உள்ள முருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு”

இப்பாடற்பகுதி பரிமேலழகருரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

1099.
மதியுடம்பாடு: தோழி தலைவனுக்கும் தலைவிக்கும் கூட்டம் உண்டானமையைத் தன்னுணர்வினாலாராய்ந்து அறிதல்.
1101.
இயற்கைப்புணர்ச்சி: ஒரு தலைவன் தலைவியை ஒரு பொழிலில் தற்செயலாய்த் தனியிருத்தலைக் கண்டு காதல் கொண்டு புணர்வது இவ்வியற்கைப் புணர்ச்சி நிகழ்வதற்கு முன் தலைவனிடத்தில், காட்சி ஐயம் தெரிதல் தேறல் என்ற நான்கு செய்திகள் நிகழும் (குறள் 1081 ஐயம்)
1102.
இடந்தலைப்பாடு: தலைமகன் முன்னாட் கூடிய இடத்திலே வந்து தலைவியை எதிர்ப்படுதல்
1104.
பாங்கற்கூட்டம்: பாங்கனால் தலைவன் தலைவியைச் சென்றெய்துதல்.
1105.
தோழியிற்கூட்டம்: தலைவியது தோழியை இரந்து அவள் வழி முயன்று தலைவியைக் கூடுதல்
1109.
ஊடல்: தலைவனும் தலைவியும் ஒத்துக் கூடுங்காலத்து மனதிற்கு ஒவ்வாத பரத்தையிற் பிரிவு முதலியவற்றான் தலைவி தலைவன் மீது மனம் வேறு பட்டிருத்தல் உணர்தல்: ஊடியதைத் தணிக்கக் கருதிய தலைவன்