பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

564

திருக்குறள்

1141: பாக்கியம் - தெய்வம் என்று பொருள் கூறுவர் பரிமேலழகர் புண்ணியம் என்று மணக்குடவர் உரை வகுப்பர்.

1195. பரிமேலழகர் தந்த துறைக்குறிப்பு : [1]“அவர் மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்” என்ற தோழிக்குச் சொல்லியது.

1268. பரிமேலழகர் தந்த துறைக்குறிப்பு:— வேந்தற் குற்றுழிப்பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழி தலை மகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.

1289. அதன் செவ்வி - காம வின்பத்தின் நலன்

அடிக்குறிப்பு: உணர்ப்புவயின் வாரா ஊடல் ஆவது தலைவனால் தெளிவிக்கப்படும் தன்மையில் நில்லாத வூடல்.

1301. பரிமேலழகர் துறைக்குறிப்பு : வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற் பொருட்டு அவளோடு நகையாடிச் சொல்லியது. (வாயிலாக - தலைவனோடு தலைவியைப் பொருந்தச் செய்வதற்குத் துாதாக).

1312. பரிமேலழகர் துறைக்குறிப்பு : தலைமகள் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.

1313. பரிமேலழகர் துறைக்குறிப்பு: தலைமகளது புலவிக்குறிப்பினைக் கண்டு. “நீயிர் கூடியொழுகா நிற்கவும், இது நிகழ்தற்குக் காரணம் யாது” என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.

1322. பரிமேலழகர் துறைக்குறிப்பு ‘புலவாக்காலும் அத்தலையணி பெறலாயிருக்க அஃது இழந்து புலவியான் வருத்துவ தென்னை’என்றாட்கு அவள் சொல்லியது.

  1. 1