பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச்

செய்த

குறள்

1. கடவுள் வணக்கம்*

1. அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு

என்பது

எழுத்துகளுக்கெல்லாம் அகாரவெழுத்து முதலாயிருக்கிறாப் போலே உலகத்துக்கெல்லாம் சருவக்கியனான சுவாமியே முதலென்றவாறு.

2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழா[1] ரெனின்

என்பது

எல்லா நூல்களையும் கற்றாலு மந்த நூல்களுடைய அர்த்தங்களை யறிந்தாலும் நல்ல[2] அறிவினையுடைய சுவாமி பாதங்களைத் தோத்திரம் பண்ணாவிட்டா லவனுக்கு ஒரு பலனுமில்லை யென்றவாறு

3. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

என்பது

மலரின்[3] மேலே நடந்த சருவக்கியனுடைய நல்ல பாதங்சளைச் சேர்ந்த பேர்க ளெல்லா வுலகத்துக்கும் மேலாயிருக்கப் பட்ட மோட்சத்திலே போய் ஒரு காலமு மழியாமல் வாழ்வார்க ளென்றவாறு

4. வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கு
யாண்டு மிடும்பை யில


  • வாழ்த்து என்பது பிறர்கொண்ட பாடம்.
  1. ‘டொழா அ’ என்றிருத்தல் வேண்டும்
  2. உ ‘கேவல’ என்பது அச்சு நூல்
  3. தேவமலரின் என்பது அச்சுநூல் (தேவர்களால் இடப்படும் தாமரைமலர்