பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



iv


இவ்வாறு பல்கிப் பெருகியுள்ள உரைகளுக்கு இடையில் இங்குத் 'திருக்குறள் ஜைன உரை' பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூல் நமது சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள, ஒலைச் சுவடியிலிருந்து படியெடுத்து வைக்கப் பெற்ற கையெழுத்துப் பிரதியில் (பிரதி எண். 1940) இடம் பெற்றுள்ளதாகும்.

இத்திருக்குறள் மூல - உரைப் பதிப்பு குறித்த விவரங்களையும், இவ்வுரையின் சிறப்புகளையும் இந்நூலைப் பதிப்பித்துள்ள அறிஞர் திரு. கே. எம். வேங்கடராமையா அவர்கள் தம் முகவுரையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

நடுவண் அரசின் நிதியுதவி பெற்று வெளியிடப் படுகின்ற இந்நூலைப் பதிப்பித்துள்ள அறிஞர் திரு. கே. எம். வேங்கடராமையா அவர்களுக்கும். நடுவண் அரசிற்கும் நூலகத்தின் சார்பாக என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூலை நன்முறையில் அச்சிட்டுத் தந்துள்ள சிதம்பரம் சிவகாமி அச்சகத்தார்க்குப் பாராட்டுக்க ளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் அன்பர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம்.

தஞ்சாவூர், தி. சண்முக ராஜேஸ்வரன், இ. ஆ. ப.
26-10-91 மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்
இயக்குநர் (பொறுப்பு)
சரசுவதி மகால் நூலகம்.