பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O திருக்குறள் ஆகாசத்திலே யிருந்து மழை பெய்யாவிட்டால் இந்த லோகத்திலே தானமுந் தவசு மில்லாமல் போய்விடு மென்ற வாறு ੈ। 20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு என்பது எப்படிப்பட்டவர்களுக்குந் தண் ணியை யல்லாமல் ஒரு காரியமு மாகாது; அந்தத் தண் ணி யு மாகாசத்திலே மேசங்க ள் கொடுத்தாலல்லாமல் இல்லை யென்றவாறு. (0 வான்சிறப்பு முற்றும். 3 நீத்தார் பெருமை என்பது, ஆசாபாசங்களையும் விட்டுத் துறந்து தபசு பண்ணு கிற முனியீசுவரர்களுடைய பெருமையைச் சொல்லுகிறதாம். 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு என்பது தவசுக்குரியதான நல்ல ஒழுக்கங்களிலே நின்று தவசு பண்ணுகிறவர்கள் பெருமையைப் பெரியதாயிருக்கிற வஸ்த்துக் களுள்ளுந் தவசே பெரியதென்று சகலமான நூல்களுஞ் சொல்லு, மென்பதாம். தி 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று என்பது 1. வேணும் - வேண்டும் 2. தவசு-தபன்-தவம் 4. யில்லாமல் 1. வஸ்த்துக்கள் - பொருள்கள்