பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 69 47. இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. என்பது இல்லறமாகிய சமுசாரத்திலே யியல்போடு கூடிச் சொன்ன 'தர்மத்தின் வழியே நடக்கிறவன் புலன்களையும் மாசையையு மடக்கித் தபசு பண்ணுகிறவர்களுக்கு எல்லாந் தலைவனா' மென்றவாறு - GT 48 ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து என்பது தபசு பண்ணுகிறவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுத்தும் பசி முதலானவற்றை நீக்கி அவர்களைத் தபசின் வழியே நடக்கப் பண்ணித் தானு மில்லறத்தினுடைய வழி தப்பாமல் நடக்கிற சமுசாரி அந்தச் சன்னாசிகளைப் பார்க்கிலு மதிகமான விரத" முடையவ னென்பதாம் تھے۔ | 49. அறனென்னப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று என்பது இல்லறத் துறவறம் என்னப்பட்ட இரண்டிலேயும் இல்லறமே தர்மமாவது; மற்றத் துறவறமும் பிறராற் பழிக்கப்பட்ட குற்றங் களில்லாமலிருந்தால் நல்லதென்பதாம் அஒரு 50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும் என்பது இல்லறத் தியல்புடன் கூடி வாழ்கிற சமுசாரி மனுஷனே யானாலும் அவன் ஆகாசத்திலே யிருக்கப்பட்ட தேவர்களுடனே சரியா மென்னப்படு மென்பதாம். - 1. முதல்வனாம் என்பது அச்சு நூல் * 1. உணவு 2. இல்லறத்தான். 3. அந்தி என்பது அச்சு நூல் 4. தவஞ்செய்வார் 5. விரதம்