பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W U திருக்குறள் துறவற மனத்தையும் பொறிகளையு மடக்க வேணும்; சமு சாரி மனத்தையும் பொறிகளையும் வாதை பண்ணாமல் நடக் கிறபடியினாலே தெய்வத் தோடொக்கு மெனலா மென்றவாறு ப) ஆக அதிகாரம் ரு பாட்டுருய. இல்வாழ்க்கை முற்றும். -* i இப்பால் 6. வாழ்க்கைத் துணைநலம் என்பது, இந்த இல்வாழ்க்கை யாகிற சமு.சாரத்துக்குத் துணையா யிருக்கிற மனையாளுடைய தன்மையைச் சொல்லுகிறது. 51. மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்பது இல்லறத்துக் குத் தக்க நல்ல குணங்களை நல்ல செய்கை களை யுடையவளாய்த் தன்னுடைய புருஷன் தேடி வருகிறத் துக்குத் தக்க செலவு பண்ணிக்கொண்டிருக்கிறவள் அந்தப் புருஷனுக்குத் துணையா மென்றவாறு. நற்குணமாகிறது, துறந்த பேர்களுக்கு ஆகாரங் கொடுக் கிறதும், விருந்து வந்தவர்களுக்குச் சந்தோஷத்துடனே உபகாரம் பண்ணுகிறதுந் தரித்திரர் பேரிலே தயையுண்டாயிருக்கிறது.மாம். நல்ல செய்கையாவது, சமு.சாரத்துக்கு வேணுமென்றது முன்னே தானே தேடிக்கொள்ளுகிறதும், நன்றாய்ச் சமைக்கிறதும், அசலகத்தா ரெண்ணிக் கொள் ளத்தக்கதாகிறது.மாம். தேடி வருகிறத்துக்குத் தக்க செலவாகிறது, முதலழியாமல் வைச்சுக்" கொண்டு மற்றது செலவழிக்க வேணுமென்றவாறு. அர். 52. மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனை மாட்சித் தாயினு மில் என்பது சமுசாரத்துக்குத் தக்க நற்குண நற்செய்கைகள் 1. கணவன் 2. அயலார் 3. வருகிறதற்கு: தேடினவரவுக்கு என்பது அச்சுநூல் 4. வைத்து