பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருக்குறள் விட்டெழுந்திருப்பாள், அப்படிப்பட்ட பதி விருதையானவள் மழைபெய்யச் சொன்னவுடனே பெய்யுமென்பதாம். தொழுதெழுவா ளென்றது தெய்வங்களைத் தொழுகிறத் துக்கு மனது தெளிவா யிருக்கிறது. நித்திரையை விட்டெழுந் திருக்கிற பொழுதான படியினாலே, ராத்திரி நித்திரை பண்ணிக் காலமே யெழுந்திருக்கிறது முதலான தெய்வங் களைத் தொழவேணு மென்பதாம் டு 56. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்பது பதிவிருதா பாவத்தை வழுவாமற் காத்துத் தன்னைக் கொண்ட புருஷனைப் போசன முதலான காரியங்களாலே நன்றாய்ப் போஷித்து இரண்டுபேரிடத்திலேயும் நல்ல கீர்த்தி வரத்தக்கதாக நடந்து நற்குண நற்செய்கைகளை விடாமல் நடந்து கொள்ளுகிறவளே பெண் சாதி யென்றவாறு. அா 57. சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர் நிறை காக்குங் காப்பே தலை என்பது பூரீகளைப் புருஷன் வீடுவாசல் காவல் காரர் கோட்டை கொம்மை முதலான துகளாலே காக்கின்ற காவல் என்ன பலனுண்டாம் அந்த பூரீகள் தங்கள் மனசைக் காக்கிறதே உத்தமமான காவலென்பதாம். மனசு வேறே நினைச்சால்? மற்றக் காவல்களாலே ஒருபயனுமில்லை யென்பதும், o Г 58. பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு என்பது - - 1. இரவில்துாங்கி 2. காலையில் 3, எழுந்திருக்கிறபோது 4. முதலாகத் 1. தர்மத்தை 2. என்பது 3. அச்சுநூல் 4. கொத்தளம் 5. முதலானவை