பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருக்குறள் 79. புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு மனசிலே தயையுடனே , கூடியிருந்து இல்லறத்தினைச் செய்யாதவர்களுக்குப் புறத்துறுப்பாகிய இடமும் பெ ரு ளும் ஏவல் செய்வாரும் என்ன பலனைக் கொடுக்கு மென்ப தாம். தயையில்லாதவர்களுக்குச் செல்வத்தினாலே ஒரு பலனு -- மில்லை யென்றவாறு. #. :חד 80. அன்பின் வழிய துயிர்நிலை ய..திலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு என்பது அன்புடனே கூடியிருக்கிறவனே யுயிருடனே யிருக்கிறவன்; அன்பில்லாதவன் எலும்புகளைக் கூட்டித் தோலினாலே போர்த்துவைத்த வுடம்புக்குச் சரி யென்பதா மென்றவாறு' μ) ஆக அதிகாரம் அ; குறள் அய இப்பால் 9. விருந்தோம்பல் என்பது, விருந்தாக வந்தவர்களைச் சந்தோஷத்துடனே யழைத்து நன்றாய் அன்ன வஸ்திரங்களினாலே போஷிக்கிறது. 81. இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்பது பெண் சாதி யுடனே கூடிச் சமுசாரத்திலே யிருந்து பொருள் களைத் தர்மத்தின் வழியே தேடிக்கொண்டு வாழ்கிற தெல்லாம். விருந்தினர்களைப் போற்றி அவர்களுக் குபகாரஞ் செய்கிற நிமித்திய மென்பதாம். பொருள்களைப் போற்றி வாழ வேணும்; பொருளைப் போற்றுகிறது முதலழியாமற் செலவிட வேணு மென்றவாறு." தி 1. குறிப்புரை காண்க