பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை s's செய்தால் அவனுக்குத்’ தரித்திரமில்லாமலுந் துக்கமில்லாமலுஞ் சுகமே யிருப்பார்க ளென்றவாறு. ச 95. பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற என்பது ஒருவனுக்கு ஆபரணமாகிறது, தன்னை வணங்குகிறவர் களுக்குத் தானும் வணங்கி எல்லாரிடத்திலும் நல்ல வசனங் களைச் சொல்லுகிறதே. இதல் லாத மற்ற ஆபரணங்களெல்லாம் ஆபரணமல்ல யென்றவாறு. டு 96. அல்லவை தேய வறம் பெருகும் நல்லவை நாடி யினிய சொலின் என்பது ஒருவனுக்கு நன்மை வரத்தக்க நல்ல சொற்களை யாராய்ந்து பார்த்துச் சொல்லு மாயின் அவனுக்குப் பாவங்கள் கெட்டுப் போய்த் தருமமு வளரு மென்றவாறு. 97. நயனின்று நன்றி பயக்கும் பயனின்று பண்பிற் றலைப்பிரியாச் சொல் என்பது இம்மைக்கு நீதியை யுண்டாக்கி மறுமைக்குத்தர் மத்தையு முண்டாக்கும், ஒருவற்குப் பொருளா லுதவி செய்து நல்ல வசனத்தையுஞ் சொன்னா லென்றவாறு. பொருள் வறுமையால் பிறருக்கு உபத்திரவம் பண்ணாம லிருக்கிறதே நல்ல தர்மமென்றவாறு. oT 98. சிறுமையு னிங்கிய வின்சொல் மறுமையு மிம்மையு மின்பந் தரும் என்பது திரவிய வலுமையால் பிறருக்கு வாதை பண்ணாத நல்ல