பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - திருக்குறள் 104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்பது ஒருவன் தினையத்தனை யுபகாரத்தைப் பண்ணினாலும் அத னைப் பனையத்தனைப்பெரிய உபகாரமாக நினைப்பர். உப காரத்தின் பலனை யறிந்த பெரியோரென்றவாறு. శ్రిగా 105. உதவி வரைத்தன் றுதவி யுதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்பது ஒருவ னுபகாரஞ் செய்ய அவனுக்குப் பிறத்தியுபகாரம் பண் னின உதவிகாரணத்தினாலேயும் பொருள்ாலேயுங் காலத்தினா லேயு மாகிய மூன்று வகையாலும் பார்த்தால் அவன் செய்த வுபகார மாத்திரமே யல்ல. செய்வித்துக் கொண்டவன் பெருமை யாகிய நற்குணங்க ளெத்தனை யுண்டோ அத்தனையும் பெரிய தென்ற வாறு. டு , I 0.5. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துட் டுப்பாயார் நட்பு என்பது துக்கப் படுகிற காலத்திலே தனக்குச் சினேகமா யிருந்தவர்க ளுறவை விடாமலிருக்கவேணும்; அறிவினாலு மாசாரத்தினா லுங் குற்றமற்றாரது கேண்மை மறக்க வேண்டா மென்ற வாறு. அர I 0.7. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு என்பது தங்களுக்கு வந்த துக்கத்தினை நீக்கினவருடைய சினேகத்தைத் தாங்கள் பிறக்கிற ஏழேழு சென்மங்களிலேயும் நினைப்பார்கள் நல்லோர்களென்றவாறு. Ст == 1. போற - போகிற என்க.