பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6 திருக்குறள் இப்பால் 14. ஒழுக்கமுடைமை என்பது அந்தந்த சாதிக்கும் ஆசார நிலைக்கும் சொல்லப்பட்ட ஆசாரத்தின் வழியே நடக்கிறதாம். 131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும் என்பது ஆசாரமாய் நடக்கிறது எல்லாருக்கும் பெருமையைக் கொடுக்கிற படியினாலே, அந்த ஆசாரத்தைப் பிரானனைப் பார்க்கிலும் அதிகமாகப் பார்த்துக் காக்கவேண்டும் என்றவாறு பிராணன் எல்லாவற்றிலும் பெரியதானாலும் ஆசாரத்தைப் போல மறுமைக்கு உறுதி செய்யமாட்டாது. ஆனபடியினாலே ஆசாரத்தையே காத்து ரகூவிக்க வேண்டும் என்பதாம். تالي 132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை என்பது ஒழுக்கத்தை ஒன்றினாலேயும் அழிவு படாமல் போற்றி வருந்திக்காக்க பலதர்மங்களையும் ஆராய்ந்து பார்த்தால் ஒழுக்கத்தைப் போல் இம்மை மறுமை இரண்டிற்கும் துணை யாகத்தக்கதில்லை; ஆனபடியினாலே ஆசாரத்தைச் செய்ய வேணும் என்பதாம் என்றவாறு. =L 133. ஒழுக்க மு டைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்பது எல்லாருக்கும் ஆசார முண் டாயிருக்கிறதே நல்ல குலமாம். அந்த ஆசாரம் கெட்டால் அதுவே தாழ்ந்த ஜாதியாம் என்ற வாறு. உயர்ந்த ஜாதியிலே பிறந்தவர்களானாலும் ஆசாரமில்லா விட்டால் தாழ்ந்த ஜாதியராவர்; தாழ்ந்த ஜாதியிலே பிறந்