பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 43. அறிவு உடைமை

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். 427

சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. 422

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. 423

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. 424

உலகம் தழிஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. 4.25

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. 426

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர். 427

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில், 428

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். 429

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். 430