பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.ஆ.பெ. விசுவநாதம்

மழையானது மக்கள் போற்றவேண்டிய ஒன்று. ஏனெனில், அது உண்ணும் பொருள்களை உண்டாக்கிக் கொடுத்துத் தானும் உணவாக மாறுகிறது. பெரியோர்களைப் போற்றுங்கள். மனைவி, மக்களோடு வாழுங்கள். விருப்பு, வெறுப்பு அற்று வாழுங்கள். இது ஒரு தொகுப்பு.

படி, படிக்கவேண்டியவைகளைப் படி! குற்றமறப் படி! படிக்காவிட்டாலும் கேள்! படித்து, கேட்டு அறிந்தபடி நட' இது ஒரு தொகுப்பு.

'சூதாடாதே! பொய் சொல்லாதே! புலால் உண்ணாதே! கள் குடியாதே களவு செய்யாதே! வஞ்சகம் கொள்ளாதே! தீயன எண்ணாதே! இது ஒரு தொகுப்பு.

"நட்புத் தேவை அதை ஆராய்ந்துகொள்! தியவர் உறவை நோயென விலக்கு! பெரியோரைத் துணைக் கொள்! பிறரோடும் அன்டாயிரு மனைவியை மதி! மக்களைப் பெறு! அறிவை அடை சொல்வதெல்லாம் நல்லதாக இருக்கட்டும்! செய்வதெல்லாம் திறமையாக இருக்கட்டும் அறத்தின் வழிநின்று பொருளைத் தேடி இன்பத்தைப் பெறு! வீடு உண்டானால் அது உன்னைத் தேடி வரும் என்பதே.

இவைதான் வள்ளுவருடைய கொள்கை. அதைத்தான் நீங்கள் திருக்குறளில் பார்க்க முடியும். இது எந்த நாட்டிற்கு, எந்த மக்களுக்கு எந்த நிறத்தினருக்கு, எந்த மொழியினர்க்கு, எந்தச் சமயத்தினர்க்கு வேறுபாடு உடையது? இராது! அவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துக்களைக் கொண்டவர் வள்ளுவர்.