பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 110

ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும். S11 செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச்செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக 512

அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந் நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும். 513

எல்லாவகையிலும் ஆராய்ந்து தெளிந்தபோதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர். 514

செய்யும் செயலைப்பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது. 515 செய்பவனைப்பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும். 516

இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டுவிடுதல் வேண்டும். 517 இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்டபின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும். 518

எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனைவிட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும். 519 தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள் தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக 520