பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 134

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையும், நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன். 63? மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலங்களின் துய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன். 632 பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன். 633

எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்தபின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன். 634 நீதிநெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய், இருப்பவனே, நல்ல அமைச்சன். 63S இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான

சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும். 636

செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை, உலகத்தின் இயற்கையையும் அறிந்து, அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும். 637 அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமை யாகும். 638 அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியைவிட, எழுபதுகோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம். 639 முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள். 640