பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 156

பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர் களுக்கும் அரண் செல்வம், அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக்கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம். 741 நீலமணிபோன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப் பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்! 742 'உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண் என்று போரியல் நூல்கள் கூறும். 743 காக்கவேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்கவல்லதே நல்ல அரண் ஆகும். 744 பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாயும், அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண். 745 அகத்தாருக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண். 746 சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்று வதற்கு இயலாத அருமையுடையதே அரண்! 747 வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்துநின்ற படியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண். 748 முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்துபோகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்! 749 எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவ ரானால், அந்த அரணும் பயனற்று அழிந்துபோகும். 750