பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 164

நட்பைப்போல் ஒருவன் செய்துகொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப்போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை. 78; நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர் பிறைபோல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும். 782 நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவதுபோல், பழகப்பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும். 783 நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறுசெய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும். 784 நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்துபேசிப் பழகுதல் வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும். 785 உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச்செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்புச்செய்வதுதான் நல்ல நட்பு. 786 நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின்போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும். 787 ஆற்றுவெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவதுபோல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு. 788 'நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது? என்றால், மனமாறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்துநின்று காத்து பேணும் நிலையாகும். 789 இவர் எமக்கு இப்படிப்பட்டவர்', 'யாம் இவருக்கு இத்தன்மைவர் என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும். 790