பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - பாயிரம் 8

மழைபெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால், மழையே உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தகும். ή

உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளைவித்துத் தந்து, அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஒர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும். 12

மழை காலத்தால் பெய்யாது பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப் பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும். #3 'மழை என்னும் வருவாயின் வளம் குறைந்ததானால், பயிர் செய்யும் உழவரும் (விளைபொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள். #4 காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை, அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும். 15 வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல் உலகில், பசும் புல்லின் தலையைக் காண்பதுங்கூட அருமையாகி விடும். 16

மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால், அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும். 17

மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா. 18

மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும். 19 நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது. 20