பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 82. தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.

உறின்நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்.

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை,

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.

பேதை பெருங்கெழிஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி யுறும்.

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி யுறும்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்லாடார் சோர விடல்

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.

எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு.

811

872

873

874

815

816

817

818

819

820