பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 86. இகல்

இகலென்ப. எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய், 851

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி

இன்னாசெய் யாமை தலை 852

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். 853

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 854

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலுக்கும் தன்மை யவர். 8SS

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணத்து. 856

மிகன்மேவல் மெய்ப்பொருள் காணார் இகன்மேவல் இன்னா அறிவி னவர். 857

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலுக்கின் ஊக்குமாங் கேடு. 858

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு 859

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. 860