பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் அங்கவியல் 188

தம் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்: பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுக்கும் பொருளும் அதுவே. 90 தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும். 902 தன் இல்லாளிடத்தே தாழ்ந்துபோவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அஃது இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும். 903

தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது. 904 தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்லசெயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான். 905 தம் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம்பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே. 906 தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண்தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண்தன்மையே மேலானதாகும். 907 தம் மனையாள் விரும்பியபடியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்கமாட்டார்கள் மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள். 908 அறச்செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா. 909 கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது. 910