பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - பாயிரம் 10

ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் துணிபு. 2] பற்றுகளை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வதானால், உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும். 22 இம்மை, மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து, இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும். 23 அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான். 24 ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனுடைய வலிமைக்கு அகன்ற வானுலகோர் கோமானாகிய இந்திரனே போதிய சான்று. 25 செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவர் பெரியோர்; சிறியோர், செய்வதற்கு அரியவற்றைச் செய்யமாட்டாதவர் ஆவர். 26 சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது. 27

நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும். 28 நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒருகணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும், 29

எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர். 30