பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல் 200

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும். 961 தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்யமாட்டார்கள். 962 உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும். 963 நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப்போல இழிவு அடைவார்கள். 964 குடிப்பிறப்பாலே குன்றுபோல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள். 965 தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது, மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது; அதனால் என்ன பயன்? 966 தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள்பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவி. இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும். 967 தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல், மானம்விட்டு உடம்பைக் காப்பது பிறவிப்பிணிக்கு ஏற்ற மருந்தாகுமோ? 968 தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள். 969 தமக்கு ஒர் இழிவு வந்தபோது உயிரை விட்டுவிட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள். 970