பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல் 204

தமக்கு இது தகுவது' என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள். 981 சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே அஃது ஒழிந்த பிற நலன்கள் எல்லாம். எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது. 982 அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து துண்கள் ஆகும். 983

தவம் ஒர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்தது. 984

ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டிக்கொள்ளுதல்; சால் புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே. 985 சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரி ம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும். 986 தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், சால்பு என்று சிறப்பாகக் கொள்ளப் படுவதுதான், என்ன பயனை உடையதாகுமோ? 987

'சால்பு உடைமை' என்னும் பண்பு ஒருவனிட ம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது. 988 சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரித்தபோதும், தாம் நிலைதிரிய மாட்டார்கள். 989 பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும் 990