பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல் 206

எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு, பண்புமை மை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள். 991 பிறர்மேல் அன்புடைமையும். உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடை மையால் என்று உலகத்தார் சொல்லுவர். 992 உ. ம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது; செறியத்தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும். 993 நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள். 994 தன்னை இகழ்தல் விளையாட்டின்போதும் துன்பமானது: ஆகவே, பாடு அறிவாரிடத்து, பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும். 995 பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லை யானால், அது மண்ணினுட்புகுந்து மாய்ந்து விடும். 996 தன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப்போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஒரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர். 997 தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும். 998 பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்துபேசி உள்ளம்மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது, பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும். 999 பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின் பால் கலத்தின் குற்றத்தால் திரிதல்போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும். 1000