பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் ஒழிபியல் 210

இழிந்த செயல் காரணமாக நாணுதலே நன்மக்களது நாணம்: பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் தாணம், குலமகளிரது நாணம் ஆகும். 1011 ஊனும் உடையும் அவையொழிந்த பிறவும் உலகத்து மக்கள் உயிர்க்கு எல்லாம் பொதுவானவை, நன்மக்களுக்குச் சிறப்பாக அமைவது நாணம் ஆகும். 1012 உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒருபோதும் விடமாட்டா அவ்வாறே நாணம் என்னும் குணத்தையும் சால்பு ஒருபோதும் விட்டுவிடாது. 1013 நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஒர் ஆபரணம் ஆகும்; அந்த நாணம் என்னும் ஆபரணம் இல்லையானால், அவரது பெருமித நடை கண்டவர்க்கு நோயாகிவிடும். 1074 பிறரது பழியையும் தம்முடைய பழியையும் சமமாக மதித்து நானுபவரை, உலகத்தார், நாணத்திற்கே உறைவிடம் இவர்தாம் என்று சிறப்பித்துச் சொல்வார்கள். 1015 உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள். 1016 நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாதபோது, சான்றோர்கள் உயிரை விட்டுவிடுவார்கள் உயிரைக் காப்பதற்கு நாணத்தை விடமாட்டார்கள். 10|7 கேட்டவரும் கண்ட வரும் நானமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந் நாணானது, அவனைவிட்டு அறம் நீங்கிபோகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கிவிடும். 1018 ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும் ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும். 1019 தம் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளதுபோல் மயக்குவது போன்றதாகும். 1020