பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல் 212

என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஒயமாட்டேன்' என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை. 102} 'முயற்சியும், நிறைந்த அறிவும்' என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத கருமச்செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும். #022 'என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்' என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு தெய்வமும் மடியை உதறிக்கொண்டு முன்வந்து உதவி நிற்கும். 1023 தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர் களுக்கு, அதன் வழிபற்றி அவர் ஆராயும் முன்பே, தெய்வ உதவியால், அது தானாகவே முடிந்துவிடும். 7024 குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன்குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள். 1025

'ஒருவனுடைய நல்லாண்மை என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை, அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும். 1026 அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார்: அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர். 102.7

தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்: மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும். ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை. 1028 தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே ஒர் கொள்கலமோ? அஃது ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ? 1029 துன்பம் வரும்போது, அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம்புகுந்த தனால் வீழ்கின்ற மரம்போலத் தானும் வீழ்ந்து படும். 1030