பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- &s — * oo பொருட்டால் - ஒழியியல் . 220

தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத் துதவும் கண்போன்றவரி மும் சென்று இரந்துநிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி தன்மை தருவதாகும். 106]

முயற்சிசெய்து உயிர்வாழ்தல் என்றில்லாமல், இரத்தும் ஒருவன் உயிர்வாழ்தலை, இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானா னால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக! 7062 வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று தினையாமல், இாந்து நீக்க நினைக்கும் வன்மையைப்போல, வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை. #06.3 நுகர்பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும், பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது. {064 நெறியோடுகடிய முயற்சியாலே கொண்டுவந்தது, தெளிந்த நீரைப்போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும், அதனை உண்பதைவிட இனியது வேறு யாதும் இல்லை. 1065 வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு நீர் தருவீராக என்று இரத்தாலும், அதனைப்போல தாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை. łó66 'உமக்கு இரக்க வேண்டுமானால், உள்ளதை ஒளிக்காமல் மறைப்பவரிடம் சென்று இரக்காதீர்கள் என்று இரப்பவரை எல்லாம் யான் இரத்து வேண்டுகின்றேன். }{}67 வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும்போது, இடையிலே காத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும். }{}68

இரத்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும்; அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால், அந்த உருக்கமும் காய்ந்துபோகும். #(\69 ஒளிப்பவர் இல்லை என்று சொன்னதுமே, இரப்பவர் உயிர் போய்விடுகின்றது. ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ! 1070