பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல் 222

வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப்போன்றிருப்பார்கள்: அவரைப்போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை. 1071

தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரைவிட, அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர்: அவர்போல. இவர் தம் நெஞ்சத்தில் கவலையில்லாதவர் ஆதலால், 1072 தேவரைப்போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவனசெய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர். 1073

கீழ்மக்கள் தம்மிலும் கீழாகநடப்பவரைக் கண்டால், அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர். 1074 அரசால் துன்பம் வரும் என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம் அஃது ஒழிந்தால், விரும்பப்படும் பொருள் வரும்போது, சிறிது உண்டாகும். 1075

கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக்கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர். #076 தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லா தவருக்கு கீழ்மக்கள், தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட

உதறமாட்டார்கள். 1077 குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்: கரும்பைப்போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர். 1078 பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர்மேல் வடு உண்டாக்கவும் முயல்வான். 1079 ஒரு துன்பம் வந்துவிட் 1ல், அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர். அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியராகார். 1080