பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - களவியல் 232

அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய்! நீ வாழ்க! எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னைக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்! 1111 இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளைப் பூவைப் போன்றதாகுமோ என்று, இக் குவளை மலரைக் கண்டால், நெஞ்சே, நீயும் மயங்குகின்றாயே! 1112 அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம் பல்லோ முத்து: இயல்பான மணமோ நறுமணம்: மையுண்ட கண்கள் வேல் போன்றவை தோள்களோ மூங்கில் போன்றவை! 1113 குவளை மலர்கள், இவளைக் கண்டால், இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம் என்று தலையைக் கவிழ்ந்து நிலத்தை நோக்குமே! 1||4 தன் இடையின் துண்மையை தினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்புகளையாமல் கூந்தலிலே குடியுள்ளாளே! இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா' }}јŠ மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகத்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே! J}}6 அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளதுபோல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ? 1717 மதியமே! இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப்போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்! நீதான் வாழ்க! ፱18 மதியமே! மலர்போன்ற கண்களையுடைய இவளின் முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதிருப்பாயாக! 11/9 மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே! #20