பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 14. நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி, ||3}

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. 1132

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். 1133

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல்லாண்மை என்னும் புணை. 1134

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். 1135

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண். 1136

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல், 1137

நிறையரியர் மன் அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். 1138

அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம் மறுகின் மறுகும் மருண்டு. 1139

யாங்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. 1140