பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

காமத்துப்பால் - கற்பியல்

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக, பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக {151 அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது: இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது. 1152 அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் பிரிவது ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், பிரியேன் என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை! 1153 அருள் செய்த காலத்தில், 'அஞ்சாதே என்றுகூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப்பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ? j}54 என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும். #155 பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால், அவர் மீண்டும் திரும்பிவந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் நம் ஆசையும், பயன் இல்லாததே! #156 நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ? 1157 தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது; இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதைவிட மிகவும் துன்பமானது. 1158 தன்னைத் தொட்டால் சுடுவதல்லாமல், காமநோயைப் போலத் தன்னை அகன்று தொலைவில் விலகினால் சுடுவதற்குத் தீயும் ஆற்றல் உடையது ஆகுமோ! 1159 காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்! 1760