பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 248

தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் ஆவர். fí91 தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர்வாழ்பவருக்கு, வானம் மழைபெய்து உதவினாற் போன்றது ஆகும். 1792 காதலரால் விரும்பப்படுகிறவருக்கு இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம் என்னும் செருக்குப் பொருந்துவது ஆகும். 119.3 தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப்படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம் மகளிர், முன்செய்த நல்வினைப் பயனை உடையவரே அல்லர். 1194 நாம் காதல் கொண்டவர், நம்மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத்தான் செய்யப் போகின்றார்! $195 'காதல் ஒருதலையானது' என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப்போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது. 1196 இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டுமே காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காண மாட்டானோ? #197

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களைவிட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை. 1198 யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது. 11.99 நெஞ்சமே! நின்னிடம் அன்பற்றவருக்கு நின் நோயைச் சென்று சொல்லுகிறாயே, அதைவிட எளிதாகக் கடலைத் துர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக #200