பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 254

பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்! 122] மயங்கிய மாலைப்பொழுதே எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ! 1222 பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்! #223 காதலர் அருகே இல்லாதபோது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப்போல, இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே! #224

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ? 1225 மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னைவிட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே! 1226 காலையிலே அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து, மாலைப்பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றது, இந்தக் காமமாகிய நோய். 1227

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் துதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே! 1228 அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே, இந்த ஊரும் மயங்கியதாய், என்னைப் போலத் துன்பத்தை அடையும். 1229 பொருள் காரணமாகப் பிரிந்துசென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப்பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே! 1230