பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் - 260

நாணம் என்னும் தாழ்பொருந்திய திறை என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது. 1251 காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது, அஃது என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது. W252 யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவோ, என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும். 1253 இதுவரையில் நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன்; ஆனால், என் காமம், என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே! 1254 தம்மை வெறுத்தவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று. #25.5 வெறுத்துக் கைவிட்ட காதலரின்பின் செல்லுதலை விரும்பிய நிலையிலே இருப்பதனால், என்னை அடைந்த இக் காமநோயானது எத்தன்மை உடையதோ! #256 நாம் விரும்பிய காதலரும், காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் நாணம் என்று குறிக்கப்படும் ஒன்றையும் அறியாதேயே இருப்போம். #257 பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று, தம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன. 1258 ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன். ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்துவிடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன். 1259 தீயிலே கொழுப்பை இட்டாற்போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு இசைந்து ஊடி நிற்போம் என்று, ஊடும் தன்மைதான் உண்டாகுமோ! 1260