பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 24

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும். 9| முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவ னானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளைவிட நல்லதாகும். 92 முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும். 93 எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும். 94 பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும், பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா. 95 நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும். 96 பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒருசிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், தன்மை தந்து உபகாரம் செய்யும். 97 சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமை யிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும். 98

இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்டவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ? 99

இனிய சொற்கள் இருக்கின்றபோது ஒருவன் இன்னாத

சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும் காயைத் தின்பது போன்றதே! 100