பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 30

அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும் அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும். {2} அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காத்து வருக உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை. 122 அறியவேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும். 123 தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும். 124 பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும்; அவருள்ளும் செல்வர்க்கு அதுவும் ஒரு செல்வத்தைப் போன்ற சிறப்பினதே யாகும். 125 ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு. #26

எவற்றைக் காக்காதவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும் காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர். 127 தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையுமே இல்லாமற் போய்விடும். 128 தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினாலே சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒருபோதும் மறையவே மறையாது. 129 சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற் கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும். 130