பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 32

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும். 13] வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்கவேண்டும் பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும். I32 ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை, ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும். #33 கற்றதை மறந்தாலும் மீண்டும் ஒதிக் கற்றுக் கொள்ளலாம்: ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும். 134 பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை. 135

மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒருபோதுமே பிறழ மாட்டார்கள். 136

ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள், ஒழுக்கக் கேட்டால் அடையத்தகாத பழியை அடை வார்கள். 137

நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும் தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும். 138 தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாத பண்பாகும். #39 உலகத்தவரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர். 140