பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 15. பிறனில் விழையாமை

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல், 14]

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையார் இல், 142

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்.இல் தீமை புரிந்தொழுகு வார். 143

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். 144

எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. 145

பகைபாவம் அச்சம் பழி.என நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். 146

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். 147

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு 148

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்

பிறற்குரியாள் தோள்தோயா தார். 149

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. 150