பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அறத்துப்பால் - இல்லற இயல்

பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவான். 191 பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதைவிடத் தீமையானது ஆகும். 192 பயன் இல்லாத ஒன்றைப்பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, அவன் நல்ல பண்பில்லாதவன் என்பதை உலகுக்கு அறிவிக்கும். j93 பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும். 194 நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும். 195 பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, மனிதன்' என்றே சொல்லக் கூடாது; மக்களுள், பதர் என்றே கொள்ளல் வேண்டும். 196 நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாம விருத்தல் நல்லது. 197 அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள். 198

மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும்கூட ஒருகாலத்திலும் சொல்லமாட்டார்கள். 199

சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும். 200