பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 46

தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள். 201 தீயசெயல்கள் பிறர்க்கும் தமக்கும் தீமை விளைவித்தலால், தீயசெயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள். 202 தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்துவிடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள். 203 பிறனுக்குக் கேடு செய்வதைப்பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது; நினைத்தால், அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறமே நினைக்கும். 204 இவன் துணையிலன்' என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்கவேண்டும் செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான். 205 துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒருபோதும் செய்யாதிருப்பானாக 206 எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்: தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும். 207 தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும். 208 ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒருபோதுமே ஈடுபடாமல் இருப்பானாக! 209 ஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம். 210